அசோகரின் தூண்கள்
அசோகரின் தூண்கள் என்பன இந்திய துணைக்கண்டத்தின் பல்வேறு இடங்களில் மௌரிய அரசரான அசோகரால் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட தூண்களை குறிக்கும். முதலில் பல்வேறு தூண்கள் இருந்திருக்க வேன்டும், ஆனால் தற்போது 19 தூண்கள் மட்டுமே உள்ளன. அதில் பல உடைந்த நிலையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன[1]. அத்தூண்கள் சராசரியாக 40-50 அடி உயரமும் 50 டன் எடையும் கொண்டுள்ளன. அவை அனைத்தும் வாரணாசிக்கு தெற்கே அமைந்துள்ள சுன்னார் எனும் இடத்தில் செய்யப்பட்டு, பின்பு நூற்றுக்கணக்கான மைல் தொலைவு எடுத்துச்செல்லப்பட்டு நிறுவப்பட்டுள்ளன[2].
விரிவுரை
[தொகு]அசோகரின் ஆணைகள் பொறுத்தப்பட்டுள்ள தூண்கள், தில்லியில் இரண்டும் (உண்மையில் மீரட் மற்றும் ஹரியானாவின் டொப்ராவில் அமைந்திருந்து 1356 ஆம் ஆண்டில் பிரோஸ் ஷா துக்ளக் ஆட்சிகாலத்தில், தில்லிக்கு கொண்டுவரப்பட்டன), மற்றும் அலகாபாத் தூண் ஆரம்பத்தில் கௌசாம்பியில் இருந்ததாக நம்பப்படுகிறது. பிற தூண்கள் லௌரியா நந்தன்காட், ராம்பூர்வா காளை & சிங்கத்தூண், சங்காசியா, சாஞ்சி மற்றும் சாரநாத் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இறை அர்ப்பணிப்பு பற்றியான கல்வெட்டுகள் லும்பினி மற்றும் பிராமி எழுத்திலான மூன்று கல்வெட்டுகள் கிர்நார் மலையிலும் மற்றும் கிர்நார் மலையடிவார நகரமான ஜூனாகத்திலும் உள்ளன. வைசாலியில் உள்ள சிங்க முகத் தூணிலும் மற்றும் ராம்பூர்வா காளை தூண்களில் எந்தவித செய்தியும் பொறிக்கப்படவில்லை[3].
இந்த தூண்கள் இரண்டு வகையான கற்களால் செதுக்கப்பட்டுள்ளன. சில மதுரா பகுதியிலில் காணப்படும் சிவப்பு மற்றும் வெள்ளை மணற்கற்களாலும், மற்றவை பொதுவாக வாரணாசியிலுள்ள சுன்னார் கற்சுரங்கதில் இருந்து எடுக்கப்பட்ட சிறிய கருப்பு புள்ளிகள் கொண்ட பொலிவான நிறத்தில் உள்ள நன்றாக தூளாக்கப்பட்ட கடினமான மணற்கற்களால் ஆனது. அனைத்து தூண்களும் ஒரே பாணியில் செதுக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் ஒரே பகுதியை சேர்ந்த சிற்பக் கலைஞர்களால் செதுக்கப்பட்டுள்ளன என்று அறியப்படுகிறது. தூண்களின் தண்டுப் பகுதி எப்போதும் மென்மையாகவும், குறுக்கு-பிரிவில் வட்டமாகவும், சிறிது நுனிநோக்கிச் சிறுத்தும் மற்றும் எப்போதும் ஒரே துண்டுக் கல்லைக்கொண்டு உளியால் செதுக்கப்பட்டுள்ளனவாக [4] உள்ளன. சிங்க முகங்கள் தாமரை இதழ்கள் போன்ற உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சதுரமாகவும் வெற்றாகவும், வட்டமாகவும் அலங்கரிக்கப்பட்டதாகவும் ஆகிய விகிதங்களில் அபசி இரண்டு வகைப்படுகின்றன. விலங்குகள், அமர்ந்தும் அல்லது நிற்கும்படியாக அபசியில் ஒரே கல்லால் செயப்பட்டுள்ளன.
தூண்களின் விளக்கம்
[தொகு]சாஞ்சி தூண்
[தொகு]இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாஞ்சியில் உள்ள பெரிய தூபி, தொடக்கத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டில் பேரரசன் அசோகனால் கட்டுவிக்கப்பட்டது. கௌதம புத்தர் பரிநிர்வாணம் எய்திய பிறகு அவரது உடலை எரியூட்டப்பட்ட சாம்பலின் ஒரு பகுதியை, சாஞ்சியில் கொண்டு வந்து அதன் மீது அமைக்கப்பட்ட ஒரு அரைக்கோள வடிவமான செங்கல் கட்டுமானம் ஆகும்.
சாரநாத் தூண்
[தொகு]பெரும்பாலாக கொண்டாடப்படும் தூண்கள் பேரரசர் அசோகரால் சுமார் 250 கி.மு.வில் வாரணாசிக்கு அருகில் உள்ள சாரநாத்தில் சிங்க முகம் கொண்டதாகும். இங்கே நான்கு சிங்கங்கள் திரும்பி அமர்ந்து இருக்கும். தற்போது தூண் சிங்கத் தலை உள்ள தூண், சாரநாத் அருங்காட்சியகம் இருக்கும் அதே இடத்தில் இருக்கிறது. அசோகரின் சாரநாத் சிங்க முகத் தூண், இந்திய தேசிய முத்திரையாகவும் மற்றும் அதன் அடிப்பகுதியில் "அசோகா சக்ரா" இந்திய தேசிய கொடி மையச் சக்கரமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
சாஞ்சி தூண் இதே போன்ற சிம்ம மூலதனம் கொண்டிருக்கிறது. ராம்பூர்வாவின் இரண்டு தூண்கள், ஒன்று காளை மற்றொன்று சிங்கம் ஆகியவையை கொண்டுள்ளன. சங்காசியா தூண் ஒரு யானையை கொண்டிருக்கிறது. அசோகரின் ஐந்து தூண்களில் ராமபூர்வாவில் இரண்டு, வைசாலி, லவ்ரியா-ஆரெராஜ் மற்றும் லௌரியா நந்தன்காட் தலா ஒன்று வீதம் பாடலிபுத்திரம் முதல் நேபாளம் வரை இணைக்கும் பண்டைய ராஜ நெடுஞ்சாலையில் உள்ள நகரங்களில் அமைந்துள்ளது.
வைசாலி தூண்
[தொகு]பண்டைய வைசாலி நகரத்தில் ஒற்றை சிங்கத்த்தின் தலைப்பகுதி ஒரு தூபியில் உள்ளது. இந்தத் தூண், ஒரு புத்த மடாலயம் மற்றும் புனித முடிசூட்டு தொட்டி நின்ற தளத்திற்கு அருகில் உள்ளது. அகழ்வாராய்ச்சி இன்னும் நடந்துக்கொண்டுள்ளன. இத்தூபிகள், மௌரியப் பேரரசின் சான்றாக உள்ளதை கண்டறியப்பட்டன.
அது முந்தைய அசோகரின் தூண்களை விட வேறுபட்டது, ஏனேனில் ஒரே ஒரு சிம்மம் வடக்கு அஃதாவது புத்தர் அவரது கடைசி பிரயாணம் எடுத்த திசையில் முகத்தை கொண்டுள்ளது[5]. 1969 ல் இந்த இடத்தில் ஆராய்ச்சி தொடந்கியமைக்கு காரணம் , இந்த தூண் மண்ணுக்கு வெளியே தெரிந்ததுதான் .மேலும் இது போன்ற தூண்கள் இந்கு பெரும் அளவில் உள்ளன, ஆனால் அவைகள் தலைப்பகுதிகள் இல்லாமல் காணப்படுகிறது.
அலகாபாத் தூண்
[தொகு]அலகாபாத்தில் உள்ள தூண் அசோகரால் செதுக்கி நிறுவப்பட்ட இத்தூணில் பின்னர் சமுத்திரகுப்தர் மற்றும் ஜஹான்கீர் ஆகியவர்களாலும் செதுக்கப்பட்டுள்ளது. அத்தூண், கங்கை மற்றும் யமுனா ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில்,அக்பரால் 16 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டப்பட்ட அலகாபாத் கோட்டைக்கு உள்ளே அமைந்துள்ளது
இத்தூண் முதலில் அலகாபாதிலிருந்து 30 கிலோமீட்டர் மேற்கே அமைந்த கோசல நாட்டின் தலைநகராக இருந்த கௌசாம்பி நகரத்தில் இருந்தது. ஜஹாங்கீர் காலத்தில் இத்தூணை அலகாபாத் கோட்டையில் நிறுவி தனது முன்னோர்களின் பெயர்களை இத்தூணில் செதுக்கினார்.
அசோகன் கல்வெட்டு பிராமி எழுத்தில் உள்ளது, மற்றும் 232 கி.மு தேதியிடப்படுள்ளது. பின்னர் ஒரு கல்வெட்டு, குப்தப் பேரரசர் இரண்டாம் சமுத்திரகுப்தனின் கிபி 375 தேதியிடப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட பிராம்மி எழுத்தில் உள்ளது.
இந்த கல்வெட்டு இரண்டாம் சந்திரகுப்தரின் நீண்ட ஆட்சியின் குப்தப் பேரரசை பட்டியலிடுகிறது. அவர் ஏற்கனவே அந்த நேரத்தில் நாற்பது ஆண்டுகள் பேரரசராக இருந்து மற்றொரு ஐந்து ஆண்டுகள் இருந்தார். பாரசீகக் கல்வெட்டு ஒன்று பின்னர் வந்த முகலாய பேரரசர் ஜஹாங்கிரால் செய்யப்பட்டது. அக்பர் கோட்டையில் மேலும் அக்ஷய் வெட், அஃதாவது மிக பழங்கால இந்திய அத்தி மரத்தை கொண்டுள்ளது.ராமாயணம் இதிகாசத்தில் ராமர் இந்த மரத்தை வணங்கியதாக குறிக்கிறது.
ராம்பூர்வா காளை தூண்
[தொகு]இந்தியாவின் வடக்கு பிகாரில் உள்ள மேற்கு சம்பாரண் மாவட்டதில், நேபாளத்தின் எல்லையை ஒட்டி அமைந்த ராம்பூர்வா பகுதியில் அசோகர் நிறுவிய கிமு மூன்றாம் நூற்றாண்டின் ராம்பூர்வா காளையின் தூபி கண்டெடுக்கப்பட்டது.[6][7][8]
சங்காசியா யானையின் தூண்
[தொகு]பண்டைய இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின், பருகாபாத் மாவட்டத்தில், சிராவஸ்தி அருகே அமைந்த பண்டைய நகரமாகும். கௌதம புத்தர் சுவர்க்கத்தில் மூன்று மாதங்கள் தங்கி அபிதம்மத்தை தனது தாய் மாயாதேவிக்கு அருளிய பின்னர் பூமியில் இறங்கிய இடமே சங்காசியா ஆகும்.[9] அசோகர் இவ்விடத்தில் புத்தரின் நினைவாக யானை தூபியையும், கௌதம புத்தரின் தாய் மாயாதேவிக்கு ஒரு விகாரையையும் நிறுவினார்.
பர்குட் தூண்கள்
[தொகு]இந்தியாவின், மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்னா மாவட்டத்தில் உள்ள பர்குட் கிராமத்தில் அசோகர் நிறுவிய தூபிகளும், கல்வெட்டுகளும் உள்ளது.
லௌரியா நந்தன்காட்
[தொகு]இந்தியா-நேபாள எல்லை அருகில் பிகார் மாநிலத்தின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள லௌரியா நந்தன்காட்டில், கிமு மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் நிறுவிய தூண்களால் புகழ் பெற்றது.
லௌரியா-ஆராராஜ்
[தொகு]இந்தியாவின் பிகார் மாநிலத்தில், கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் அமைந்த ஊராகும். பண்டைய லௌரியா-ஆராராஜ் நகரம், இந்திய-நேபாள எல்லையின் அருகில் உள்ளது.
லௌரியா-ஆராராஜ் நகரத்தில், கிமு 299 – 200ல் மௌரியப் பேரரசர் அசோகர் நிறுவிய தூண்களால் புகழ் பெற்றது. இங்குள்ள தூபி மெருகூட்டப்பட்ட மணற்கல்லில் செதுக்கப்பட்டடது. இத்தூபியின் உயரம் 36.6 அடியும், சுற்றளவு 3.6 அடியும் கொண்டது.[10]இத்தூபியில் அசோகரின் கல்வெட்டுக் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளது.
மொழிகள் மற்றும் உரை
[தொகு]அலெக்சாண்டர் கன்னிங்காம், தூண்களின் கல்வெட்டு எழுத்துக்களை முதலில் ஆய்வு செய்தவர். அவர் அவை கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு பாரசீக மொழி, அஃதாவது "பஞ்சாபி அல்லது வடமேற்கு பேச்சுவழக்கு, உஜ்ஜைனி அல்லது நடுத்தர, மற்றும் அர்த்த மாகதி அல்லது கிழக்கு பேச்சுவழக்கில் எழுதப்பட்டுள்ளது என்றார்[11]. அவைகள் பிராம்மி உரையில் எழுதப்பட்டுள்ளன.
கண்டுபிடிப்பின் வரலாறு
[தொகு]அசோகாவின் முதல் தூண், பண்டைய தில்லி இடிபாடுகளில் தாமஸ் கொர்யட்டி என்பவரால் 16 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அவர் அது பித்தளையில் செய்யப்பட்டது என்றார். பரிசோதனையின் பின் அவை மிகவும் பளபளப்பான மணற்கல்லால் செய்யப்பட்டுள்ளதை உணர்ந்தார். அதன் குறிப்புகள் கிரேக்கத்தின் ஒரு படிவத்தை ஒத்திருந்ததை உண்ர்ந்தார். 1830யில் ஜேம்ஸ் ப்ரின்ஸெப், கேப்டன் எட்வர்ட் ஸ்மித் மற்றும் ஜார்ஜ் டர்னொவர் உதவியுடன் முறையே ஆராய்ச்சியை தொடங்கினார்.
அவர்கள், அவ்வுரை புத்தர் தான் ஞானம் பெற்று 218 ஆண்டுகள் பிறகு அரியணை வந்த அசோகரை குறிப்பிடப்படுகிறது என்று தீர்மானித்தனர். அறிஞர்களுக்கு, மேலும் பாறைகள் முகத்தில் அல்லது கற்தூண்களில், வட இந்தியா, வடமேற்கு இந்தியா மற்றும் தக்காண பீடபூமி வரை , அசோகரின் கல்வெட்டுகள் 150 கிடைத்தது. இந்த தூண்கள் எல்லை நகரங்கள் மற்றும் வர்த்தக பாதைகளின் மைய இடங்களில் வைக்கப்பட்டு இருந்தன.
கட்டமைப்பு பின்னணி
[தொகு]அசோகர், அவரது தாத்தா சந்திரகுப்த மௌரியரால் நிறுவப்பட்ட பேரரசுக்கு 269 கி.மு.வில் அரியணை ஏறினார். அசோகர், மதிப்பீட்டின்படி அவரது ஆட்சியின் ஆரம்பத்தில் ஒரு கொடுங்கோலனாக இருந்தார். கலிங்கப் போருக்குப் பின் எட்டு ஆண்டுகளுக்கு கழித்து, அசோகர் பேரிழப்பை எண்ணி புத்த மதத்திற்கு மாறினார்.கலிங்க நாட்டில் பௌத்த சமயப் பிரச்சாரம் செய்தார். அவர் தனது வாயால் கூறிய செய்தி: கலிங்கப் போரின் போது, "ஒரு நூற்று ஐம்பது ஆயிரம் மக்கள் நாடு கடத்தப்பட்டு இருந்தனர், ஒரு நூறு ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர், மற்றும் பல மறைந்து வழ்ந்தனர் ..." . புத்த மதம் ஒரு மாநில மதம் ஆகவில்லை ஆனால் அசோகர் அது வேகமாக பரவ ஆதரவு தெரிவித்தார். தூண்களில் கல்வெட்டுகளில் புத்த சமய அடிப்படையில் ஒழுக்கத்தை பற்றி அரசாணைகள் விவரித்தன. அசோகா புத்தர் வாழ்வின் நிகழ்வுகளை 84,000 நினைவுச்சின்னங்களில் பொறித்தார். அவை சிலவற்றின் வலை போன்ற சுவர்களில், மையமாக ஆரங்கள் மற்றும் ஒரு சக்கரத்தின் விளிம்பின் உருவத்தையும் கொண்டிருந்தன.மற்றவை சுவஸ்திகை உருவம் கொண்டிருந்தன. அச்சக்கரம் சூரியன், நேரம், மற்றும் புத்த சட்டம்(தர்மச்சக்ரா) ஆகியவற்றையும், சுவஸ்திகை தீமை எதிராக ஒரு நிலையான இறை நடனத்தை குறிக்கிறது[12][13].
இதனையும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ Harry Falk, Asokan Sites and Artefacts: A Source-Book with Bibliography (Mainz am Rhein, 2006).
- ↑ http://www.cs.colostate.edu/~malaiya/ashoka.html
- ↑ Mahajan V.D. (1960, reprint 2007). Ancient India, S.Chand & Company, New Delhi, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81 219 0887 6, pp.350-3
- ↑ Thapar, Romila (2001). Aśoka and the Decline of the Mauryan, New Delhi: Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 019 564445 X, pp.267-70
- ↑ "Bihar Tourism". Archived from the original on 2015-07-22. பார்க்கப்பட்ட நாள் 2012-04-12.
- ↑ "Rampurva". Bihar Tourism. பார்க்கப்பட்ட நாள் 7 October 2014.
- ↑ "Rampurva". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 7 October 2014.
- ↑ Allen, Charles (2010). The Buddha and Dr. Führer: An Archaeological Scandal. Penguin Books India. pp. 66–67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-341574-3.
- ↑ Sankassa
- ↑ Lauriya Araraj
- ↑ Inscriptions of Asoka by Alexander Cunningham, Eugen Hultzsch. Calcutta: Office of the Superintendent of Government Printing. Calcutta: 1877
- ↑ Time Life Lost Civilizations series: Ancient India: Land Of Mystery (1994) p. 84-85,94-97
- ↑ Oliphant, Margaret "The Atlas Of The Ancient World" 1992 p. 156-7
வெளிக் குறிப்புகள்
[தொகு]- Archaeological Survey of India [1]
- [2] பரணிடப்பட்டது 2012-10-15 at the வந்தவழி இயந்திரம்
- For Pictures of the famous original "Lion Capital of Ashoka" preserved at the Sarnath Museum which has been adopted as the "National Emblem of India" and the Ashoka Chakra (Wheel) from which has been placed in the center of the "National Flag of India" – See "lioncapital" from Columbia University Website, New York, USA